நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியின் 42வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று கூடியது
மாநகராட்சி வரியைப்பு விவகாரம் தொடர்பாக 15 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேயர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் பங்கு பெற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,
அதிமுகவை சேர்ந்த பதினைந்து மாமன்ற உறுப்பினர்களும் இன்றைய மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேயர் மாநகராட்சி ஆணையாளர் துணை மேயர் ஆகியோர் முன்னிலையில் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியது
மாமன்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயராஜ் பேசுகையில் …
தனியார் மையங்களால் நடத்தப்படக்கூடிய போதை மறுவாழ்வு மையங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், அதை முறையான ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு பாயும் என்ற பயத்தினால் தான் அவர்கள் இன்று மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர் என்று தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கூறுகையில்… காங்கிரஸ் கட்சி என்றும் திமுகவுடன் தோள் கொடுக்கும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் குமரவேல் பேசுகையில் …
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை புறக்கணிக்கவில்லை, ஓடோடி ஒளிந்து விட்டார்கள் என்றார்
மொத்தத்தில் பெரிதும் பரபரப்பாக இருக்கும் என்று காணப்பட்ட மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்றது.