Monday, 1 September 2025

Contact Info

  • BARN Media
    Pioneering the Art of Content Creation

    L35, J Block, Bharathidasan Colony, 

    K.K.Nagar. Chennai – 600078

    Tamil Nadu, India.

    Mobile: 78459 44655

    Email: mail@barnmedia.in

Some Populer Post

  • Home  
  • இனிமேல் உதயசூரியன் உதிக்காது – வி.வி.ராஜன் செல்லப்பா
- News

இனிமேல் உதயசூரியன் உதிக்காது – வி.வி.ராஜன் செல்லப்பா

25.08.2025
மதுரை கிழக்கு தொகுதியில் இனிமேல் உதயசூரியன் உதிக்காது என்ற நிலையை உருவாக்கும் வகையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் அமையும்.

அண்ணாமலை, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் 2026 ஆண்டில் எடப்பாடியார் தான் முதலமைச்சர் என உறுதிப்பட கூறிவிட்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேச்சு.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.பி.எஸ்.சேனாபதி தலைமை தாங்கினார். ஒன்றிய கழகச் செயலாளர்கள் கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியன்ணன், கார்த்திகேயன், பகுதி கழக செயலாளர்கள் செந்தில்குமார், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கழக அமைப்புச் செயலாளர் காந்தி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர் .

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.எம் ராஜேந்திரன், அம்பலம், சந்திரன்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாநில நிர்வாகிகள் விஷ்ணுவேல், கௌரிசங்கர், கண்ணகி பாஸ்கரன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் கா.அரசு, மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் சேதுராமன், அன்புசெழியன், ஜெயராமச்சந்திரன், சண்முகப்பிரியா, மற்றும் தினேஷ் குமார், மேலூர் அருண், ஒத்தக்கடை ராஜேந்திரன், தேன்சுகுமாரன், பால்பாண்டி முத்துராமலிங்கம் வக்கீல் காசிநாததுரை வெள்ளி ராமு , பி‌ஆர்சி.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது …

கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் கடந்த கடந்த ஏழாம் தேதி முதல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார், இதுவரை 110 தொகுதிகளில் 60 லட்சம் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளார். எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் போது மக்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.

இன்றைக்கு பாஜகவை சார்ந்த அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார் என்று கூறுகிறார், அதே போல பாரிவேந்தர் மீண்டும் எடப்பாடியார் தான் முதலமைச்சராக வருவார் என்று கூறுகிறார். இப்படி கூட்டணி கட்சித் தலைவர்கள், மக்கள் அனைவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சர் வருவார் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக இன்றைக்கு தமிழக முழுவதும் திமுகவிற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது, எடப்பாடியாருக்கு ஆதரவு அலை வீசுகிறது.

மதுரை கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் மக்கள் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பை எடப்பாடியாருக்கு அளிக்க வேண்டும். மதுரை கிழக்கு தொகுதி தான் எடப்பாடியாருக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தது என்ற வரலாற்றை நீங்கள் அனைவரும் உருவாக்கி தர வேண்டும் என கூறினார்.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.