இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி பிற்பகலில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் பூஜைகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளங்கோவன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- Temples
இருக்கன்குடி ஆடித்திருவிழா
15.08.2025 | விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.