சூரியுடன் பிறந்த சகோதரருக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள் – பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இசைக்கச்சேரியை பார்த்த ரசித்த நடிகர் சூரியின் சகோதரர்.
மதுரை ராசாக்கூர் கிராமத்தில் பிறந்து, சினிமாவில் தானும் ஒரு நாயகனாக வளர வேண்டும் என்கின்ற ஆசையில் படிப்படியாக துணை நடிகர், நகைச்சுவை நடிகர், என கதையின் நாயகனாக தற்போது வளம் வந்து கொண்டிருக்க கூடிய நடிகர் சூரியன் பிறந்தநாள் 27 ஆம் தேதி வரும் நிலையில், மதுரை செல்லூர் பகுதி ராயல் கேட்சிங் அலுவலகத்தில் இன்று பார்வையற்றோர் மற்றும் முதியவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அவரது நற்பணி இயக்கம் சார்பாக நடைபெற்றது.
இரட்டைச் சகோதரர்களாக பிறந்த நடிகர் சூரியன் சகோதரர் லட்சுமணன் மற்றும் அகில இந்திய சூரிய நற்பணி இயக்கத்தின் தலைவர் அகத்தீஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள, மதுரை மாவட்ட சூரிய நற்பணி இயக்கத்தின் தலைவர் ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் மருத உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு , ஆண்களுக்கு வேஷ்டி, பெண்களுக்கு சேலை உள்ளிட்டவைகளை நலத்திட்ட உதவிகளாக வழங்கினர்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இசை கச்சேரியை பார்த்து ரசித்து கொண்டிருந்தபோது, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து, மறைந்த விஜயகாந்த் அவர்களுடன் சூரியின் சகோதரரான லட்சுமணன் இருப்பது போன்று வரையப்பட்ட ஒரு படத்தை புகைப்படமாக வழங்கினர்.
நடிகர் சூரி இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரோடு பிறந்த லட்சுமணன் தான் என்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.