“பெரியாருக்கு முன்னும் பெரியாருக்கு பின்னும், பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, எப்போதும் தேவை பெரியாரே, இட ஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பெரியார் இல்லாவிடில் இன்றும் நாளையும் நம் நிலை” என்ற தலைப்புகள் கொடுக்கப்பட்டது.
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுத்து பேசினார்கள்.
சிறப்பாக பேசிய முதல் நான்கு பேருக்கு ரொக்கப் பணம் மற்றும் பெரியார் புத்தகங்களை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் மாதவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நிர்வாகிகள், மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- News
பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
29.09.2025
விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கில் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.