மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி ஜூனியர் போட்டிகள்
14.10.2025
இந்திய அணி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறது என தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் பேட்டி.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்துவதில் துணை முதல்வருடைய பங்களிப்பு சிறப்பாக உள்ளது என, ஹாக்கி இந்தியா செயலாளரும், ஏசியன் ஹாக்கி பெடரேசன் துணைத்தலைவருமான போலோநாத்சிங் பேட்டி.
மதுரை ஹாக்கி மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை உலகக் கோப்பை ஹாக்கி ஜூனியர் போட்டிகள் நடைபெற உள்ளது,
உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய 12 அணிகள் இப்போட்டியில் மதுரை மைதானத்தில் விளையாட உள்ளன,
12 அணிகள் 34 போட்டிகள் என்கிற முறையில் உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன,
இதனையோட்டி மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ள மைதானத்தில் ஹாக்கி இந்தியா செயலாளரும், ஏசியன் ஹாக்கி பெடரேசன் துணைத்தலைவருமான போலோநாத்சிங், தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் மற்றும் இந்திய ஹாக்கி சங்க பொருப்பாளர்களும் தமிழ்நாடு ஹாக்கி சங்க பொறுப்பாளர்களும் இளையோர் உலக கோப்பை நடத்தப்பட இருக்கும் ஹாக்கி மைதானத்தை ஆய்வு செய்தனர்,