மூவர்ண பலூன்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக புறாக்களையும் பறக்கவிட்ட ஆட்சியர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 42 பயனாளிகளுக்கு சுமார் 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை ஆணையாளர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள், என ஏராளமான கலந்து கொண்டனர். இதே போன்று மதுரையில் பள்ளி, கல்லூரிகள், பல்வேறு சங்க அமைப்புகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள், விமான நிலையம், ரயில்வே சந்திப்பு, மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை என மதுரை மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாலமாக கொண்டாடப்பட்டது.
- News
மதுரை மாவட்டத்தில் சுதந்திர தின விழா
15.08.2025 | சுதந்திர தின விழாவை ஒட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சிறப்பான விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.