அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி,
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அதிமுக குறித்து பேசியது சிறுபிள்ளைத்தனமானது. இ.பி.எஸ் தினசரி மாநாடு நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவரைப் போல பேசியுள்ளார்.
தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டை ஆரம்பித்துவிட்டார். எந்த ஒரு வெற்றியும் கிடைக்க வாய்ப்பில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதாக்கு பிறகு இபிஎஸ் சுற்றுப்பயணத்தை கண்டு திமுகவே கண்டு அஞ்சும் போது ஒன்றை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கின்ற விஜய்யும் அவரது கட்சியும் அதிமுக குறித்து பேசுவது கேலிக்குரியது.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-த.வெ.கவுக்கு இடையே தான் போட்டி என்று அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். களத்தில் நிற்க முடியாது. இவரைப் போன்று பலரை பார்த்து விட்டோம். அதிமுகவை சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் காணாமல் போய் உள்ளார்கள் தமிழக அரசியல் வரலாறு உள்ளது.