அப்போது நகராட்சி அலுவலர்கள், ஆணையாளர் இருக்கும் அறை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், சொத்து வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் இடங்கள் ஆகியவற்றை இடங்களை காண்பித்து விளக்கி கூறினார்கள்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் மாடியில் உள்ள நகர் மன்ற கூட்டம் நடக்கும் அரங்கை பார்வையிட்டனர். அரங்கில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு தேச தலைவர்கள், முன்னாள் நகரமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களின் படங்களை பார்த்து விவரங்களை கேட்டறிந்தனர்.
நகர் மன்ற தலைவர் மாதவன், மாணவ மாணவிகளிடம் நகர்ப்புறங்கள் கிராமப் புறங்களை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும், குப்பைகளை ஆங்காங்கே போடாமல் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட வேண்டும்,
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.