விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்.சி. சர்ச் எதிரில், தனியார் நிறுவனம் புதியதாக கட்டியுள்ள ராகா ஸ்கேன் சென்டர் மற்றும் ஆய்வகத்தினை எம்.எல்.ஏ சீனிவாசன் தலைமையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் மாதவன், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர் பிரமுகர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.