தமிழக அரசின் பல்வேறு துறைகள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமினை ஆட்சியர் சுகபுத்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நக்கீரர் தெருவில் உள்ள கொண்டல செட்டியார் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. முகாமினை நகர் மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முகாமில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
அரசின் பல்வேறு துறைகள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.
முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.