தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுள் ஒன்று விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில். இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு கோவிலில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .
கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் பூஜைகள் நடைபெற்றன.
விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வளையல்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மன் பக்தி பாடல்கள் பாடி பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- Temples
விருதுநகர் மாரியம்மன் ஆடி சிறப்பு பூஜை
15.08.2025 | விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமை, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.