மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் போக்குவரத்தாகத் திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ரயில் ஆர்வலர்கள் மதுரை ரயில் நிலைய சந்திப்பின் 4ஆவது நடைமேடையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பாக ரயில் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரிந்த மற்றும் பணிபுரிகின்ற தொழில்நுட்ப பணியாளர்களை ரயில்வே ஊழியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பிற ரயில்களோடு ஒப்பிடுகையில் இந்த ரயிலின் பயணக் கட்டணம் மிக மிகக் குறைவாகும்.
- News
வைகை எக்ஸ்பிரஸ் 48வது பிறந்தநாள்
15.08.2025 | வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 48வது பிறந்தநாள் | கேக் வெட்டி கொண்டாட்டம் | Vaigai Express 48th Birthday.