விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்கினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும், அமைச்சர் கீர்த்தனாவை தனது உடன்பிறந்த தங்கையாக நினைத்து இருவரும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தாங்கள் இருவரும் "இரண்டு சிங்கக் குட்டிகளைப் போல" மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- Virudhunagar
அமைச்சர்களின் ஒற்றுமைப் பேச்சு
விருதுநகரில் அமைச்சர்களின் ஒற்றுமைப் பேச்சு
