• Home  
  • சமூக நீதித்துறை பெயர் மாற்றம்
- Madurai

சமூக நீதித்துறை பெயர் மாற்றம்

சமூக நீதித்துறை பெயர் மாற்றம் – முருகவேல்ராஜன் பேட்டி

ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை 'சமூக நீதித்துறை' என மாற்றியுள்ளதை மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் வரவேற்றுள்ளார். திராவிடம் என்ற பெயரைக் தவிர்க்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இத்துறைப் பெயரிடுவதில் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் வன்னியரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விசிகவின் அரசியல் அழுத்தத்தால் பட்டியலின மக்களின் ஒற்றுமை சீர்குலைவதாகவும், TVKவின் 2 மாத நிர்வாக அனுபவமின்மை பல சிக்கல்களை உருவாக்குவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் பரந்தூர் விவகாரங்களில் தமிழக அரசு தலையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மதுரை செய்தியாளர் சந்திப்பில் முருகவேல்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.