விருதுநகர் மாவட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தீவிரமாக நடந்து வரும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
காரியாபட்டி பெரிய கண்மாய், கௌசிகா நதி, சாத்தூர் வைப்பாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்பணிகளை ஆய்வு செய்த அவர், மரங்கள் மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும், அகற்றப்பட்ட இடங்களில் உடனடியாக பூர்வீக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் "செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" திட்டத்தின் கீழ் இம்மாபெரும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Virudhunagar
சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி
விருதுநகரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
