விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செவலூர், கவுண்டம்பட்டி மற்றும் குமிழங்குளம் கிராமங்களில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
மக்களின் கோரிக்கையை ஏற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அவர்கள் கலந்துகொண்டு புதிய சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இப்பணியின் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியும், அடிப்படை உள்கட்டமைப்பும் மேலும் மேம்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் விருதுநகர் தொகுதி மக்களின் தேவைகளை முன்னுரிமையாகக் கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறினார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு அலுவலர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் நகர ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- Virudhunagar
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ. செல்வம் தொடங்கி வைத்தார்
