விருதுநகர் மேலரத வீதியில் உள்ள காரை சாவடி திருக்கோவிலில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
ஆடி மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்த ஆன்மீக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு, மேலரத வீதி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது இல்லங்களில் இருந்து புனித மஞ்சள் நீரைத் தட்டுகளில் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
பின்னர், அந்த மஞ்சள் நீரைக் கொண்டு காரை சாவடி திருக்கோவில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
அபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.
- Virudhunagar
காரை சாவடி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா
விருதுநகர் மேலரத வீதியில் உள்ள காரை சாவடி திருக்கோவிலில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
