அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில், ஒரு கோடியே 7 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் முன்னிலையில் புதிய மையங்களைத் திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் ஆமணக்குநத்தத்தில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்சுழி ஒன்றியம் செங்குளம், புளியங்குளம், தொட்டியாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தலா 16 புள்ளி 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
குழந்தைகள் பாதுகாப்பாகக் கல்வி கற்க குடிநீர், கழிப்பறை, சமையலறை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் துறைசார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
- Virudhunagar
திருச்சுழியில் புதிய அங்கன்வாடி மையங்கள்
அருப்புக்கோட்டை, திருச்சுழியில் புதிய அங்கன்வாடி மையங்கள்
