• Home  
  • 6 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு
- Virudhunagar

6 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு

விருதுநகரில் 6 புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் குழந்தைகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 புதிய அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் முன்னிலையில் புதிய அங்கன்வாடி மையங்களைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்காகவும், அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, விருதுநகர் நகராட்சியில் எஸ்.எம்.ஜி மற்றும் அ.ச.ப.சி.சி பள்ளி அருகில் தலா 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டவை உள்ளிட்ட 6 புதிய மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இம்மையங்களில் சமையலறை, குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியான பயனாளிகள் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.