• Home  
  • புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- Virudhunagar

புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதுப்பாளையத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம் புதுப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமை தாங்கி 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் வழங்கப்பட்ட முக்கிய நலத்திட்ட உதவிகளின் விவரங்கள்:

வருவாய்த்துறை சார்பில் 28 பேருக்கு ரூ.13.82 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைகள் சார்பில் 93 பேருக்கு ரூ.95.07 லட்சம் மதிப்பில் இணையவழிப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தெளிப்பு நீர் பாசனம், விதைகள், தாது உப்பு கலவைகள் மற்றும் புல்கரணைகள் வழங்கப்பட்டன.

11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.50 லட்சம் மதிப்பில் கடன் உதவிகள் அளிக்கப்பட்டதுடன், தையல் இயந்திரங்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்களும் வழங்கப்பட்டன.

அரசின் திட்டங்கள் பொதுமக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.