விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்தில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இரண்டு புதிய பேருந்து சேவைகளைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கொருக்காம்பட்டி – ராஜபாளையம் வழித்தடத்திற்கும் மற்றும் அருப்புக்கோட்டை – திருச்சுழி வழித்தடத்திற்கும் புதிய பேருந்து சேவைகள் இயக்கத் தொடங்கப்பட்டன.
புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தினசரிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால், அவர்கள் தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
வெம்பக்கோட்டையில் 2 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
வெம்பக்கோட்டையில் 2 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி
