80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை BSNL வர்த்தகப் பகுதி சார்பில் வெறும் ஒரு ரூபாய்க்கு 4G சிம் கார்டும், 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் அழைப்பு வசதியுடன் கூடிய 'Freedom 2.0' திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் BSNL அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மதுரை வர்த்தகப் பகுதி முதன்மைப் பொதுமேலாளர் லோகநாதன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை BSNL வர்த்தகப் பகுதியில் 4G சிம் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வருமானம் 12% உயர்ந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரூ.1-க்கு 4G சிம் கார்டு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி செப்டம்பர் 12-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இப்புதிய திட்டத்தின் கீழ் 24 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடேட் குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 SMS வசதிகள் வழங்கப்படுகின்றன.
மதுரை வர்த்தகப் பகுதியில் சொந்தமான 990 டவர்கள் மற்றும் 34 USO டவர்கள் என மொத்தம் 1,014 மொபைல் டவர்கள் மூலம் 4G சேவை வழங்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் புறநகர்ப் பகுதிகளில் கூடுதலாக 28 புதிய டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேட்டிலைட் போன் சேவை: பேரிடர் காலங்களில் கடலோர மற்றும் வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்படும் சூழலில் பயன்படுத்தும் வகையில், முதன்முறையாக BSNL சேட்டிலைட் போன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பயன்பாட்டுக்குத் தகுந்த கட்டண அடிப்படையில் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
- Madurai
BSNL 80வது சுதந்திர தினம் ரூ.1-க்கு 4G சிம் திட்டம் அறிமுகம்
BSNL 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு 4G சிம் கார்டு & ‘Freedom 2.0’ திட்டம் அறிமுகம்
