விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது . மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வருகை தந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 9.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிற புறாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பறக்க விட்டார். விழாவில் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் திருவில்லிபுத்தூர் தேவராஜ்,, திட்ட இயக்குநர் கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்செங்கோட்டையன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, திட்ட இயக்குநர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், விருதுநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.யோகேஷ் குமார், மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- News
விருதுநகர் மாவட்ட சுதந்திர தினவிழா
79-வது இந்திய சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா ஏற்றுக்கொண்டார். Virudhunagar Independence Day Celebration. 15.08.2025.