இந்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை வளாகத்தில் வைத்து முகாமை நடத்தியது.
SEED அறக்கட்டளை தலைமை அறங்காவலர் மரு.எஸ்.ஏ.பொன்னம்பலம் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார், SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனையின் வர்ம தொக்கண சிகிச்சை மருத்துவர் ஜோசப் வில்சன் அவர்கள முகாமிற்கு முன்னிலை வகித்தார்.
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியின் 1987 Batch மருத்துவர்கள் யாவரும் ஒருங்கிணைந்து இயக்கி வருவது SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மரு.கு. சிவராமன் அவர்களை தலைமை ஆலோசராக கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் இந்த SEED அறக்கட்டளை இயங்கி வருகின்றது.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்ததில் சர்க்கரை, யூரிக் அசிட் மற்றும். இரத்த கொதி.ப்பு பரிசோதனை பார்க்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, சிறுநீரக கல்லடைப்பு , மூலம், பெளத்திரம், கருப்பை கோளாறுகள் , நாட்பட்ட தோல் நோய்கள், வாதநோய் மூட்டுவலி, உடல் பருமன், தீராத தலைவலி, வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள், நாட்பட்ட சளி இருமல், ஆஸ்துமா சைனஸ் , தூக்கமின்மை போன்ற நோய்ககளுக்கு மரு எஸ்.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் 25 வருடங்கள் அனுபவமுள்ள சித்த மருத்துவர்களால் சிறந்த முறையில் சித்த மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது.
முகாமில் மாத்திரைகள், டானிக்குகள் தைலங்கள், கஷாயங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு , நாவல் மற்றும் சப்போர்ட்டா மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களில் தேவைப்பட் போருக்கு ECG பரிசோதனை அருணா கார்டியாக் கேர் மருத்துவனை உதவியுடன் செய்யப்பட்டது
- News
SEEDஅறக்கட்டளை இலவச சித்த மருத்துவ முகாம்
SEED அறக்கட்டளை சித்த மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று இலவச சித்த மருத்துவ முகாமை 2017 ஆண்டு ஜூன் மாதம் முதல் நடத்தி வருகின்றது.