பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி ஐ டி யு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்சனை வழங்க வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்,
25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு, ஒப்பந்த உயர்வு, குறைந்தபட்ச பென்சன் உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யூ போக்குவரத்து ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை இன்று துவங்கினர்.
சிஐடியூ விருதுநகர் மண்டல தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.