கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர். ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விடுதலைப் போராளி மாமன்னர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை சார்பில் விருதுநகர் மாவட்ட மாநாடு கட்சி தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்றது மாநாட்டில், கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சமூக இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வகைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் , விருதுநகர் மாவட்டத்தில் வீட்டுமனை இல்லாமல் வசிக்கும் அருந்ததியர்கள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி, வீடு இல்லாத அருந்ததியர் மக்களுக்கு நிலம் ஒதுக்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்,
கழிவுகளை அல்லுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும், தூய்மை தொழிலை இயந்திரமயமாக்க வேண்டும், அதற்கு தேவையான நிதியினை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.