இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆன்லைன் பட்டாசு வர்த்தக பாதிப்பு குறித்து வணிகர்கள் கலந்துரையாடினர். அப்போது ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் அதிகளவில் செய்யப்படுவதாகவும், இதனால் பட்டாசு கடை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக வணிகர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன்,
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசு தற்காலிக-நிரந்தர பட்டாசு கடைகளுக்கு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஒரு சிலர் முறையான உரிமங்கள் இன்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தை அரசு சைபர் கிரைம் மூலமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்தாண்டை விட இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சுமார் 70 பட்டாசு ஆலைகள் உற்பத்திக்கு தடையாணை வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பொதுமக்கள் 25 முதல் 30 சதவீதம் ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து ஏமாற்றப்படுகின்றனர் என தெரிவித்தார்.