விழாவில் குழந்தைகள் மருத்துவர் ஜவகர் வரவேற்றார். மாநில தலைவர் கோயம்புத்தூர் டாக்டர் ராஜேந்திரன் கிளையை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது…
பிற்காலத்தில் இந்த கிளை மாநில அளவில் அல்லாமல் இந்திய அளவில் சிறந்து விளங்கும் , கிளை வருவதால் பொது மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
மேலும் பட்ட மேற்படிப்பு குழந்தைகள் மருத்துவர்களுக்கும், தற்போது உள்ள குழந்தைகள் மருத்துவர்களுக்கும் புதியதாக வரக்கூடிய வியாதிகள் மருந்துகள் தடுப்பூசி பற்றிய விவரங்கள் அறிதல் இருக்கும் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் மதுரை டாக்டர் வெங்கடேஸ்வரன், பாலசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மதுரை டாக்டர் ராஜ்குமார் Flu குறித்து பேசினார். டாக்டர் பாலசங்கர் நாய் கடி மருத்துவம் குறித்து உரையாற்றினார் .
முடிவில் சிவகாசி டாக்டர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் குழந்தைகள் மருத்துவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- News
இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க விருதுநகர் கிளை துவக்கப்பட்டது
29.09.2025
விருதுநகர் JB ரெசிடென்சியில் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க விருதுநகர் கிளை துவக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஐம்பது குழந்தைகள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.