சீட் அறக்கட்டளை நடத்திய தொடர் கல்வி பயிற்சி கருத்தரங்கம்
13.10.2025
SEED அறக்கட்டளையின் பத்து வருட பயணக் கொண்டாட்டங்களின் பகுதியாக, சித்த மருத்துவ மாணவர்களுக்கான தொடர் கல்வி பயிற்சி மாதமிருமுறை இந்த ஆண்டு முழுவதும் நடக்கயிருக்கின்றது. அதன் தொடக்க விழா மற்றும் முதல் பயிற்சி பட்டறை 11/10/2025 அன்று திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள க்யூர் சித்தா கிளினிக் வளாகத்தில் நடைபெற்றது. சித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், SEED அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.