தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
13.10.2025
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், விருதுநகர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் இரண்டு நாட்கள் தீ விபத்து நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் , தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் , ரயில்கள், பேருந்துகள், அலுவலகங்கள் மற்றும் திறந்தவெளி காடு போன்ற பகுதிகளில் தீ விபத்து நேரத்தில் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும்,
மரப்பொருட்கள் , எரிவாயு சிலிண்டர், ஆயில் ,மின்சாரம் மற்றும் உலோகம் தீ விபத்து ஏற்படுமாயின், பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி அணைத்து தீ பாதுகாப்பு உபகரணங்கள் கையாளுவது குறித்த சிறப்பு வகுப்புகளும் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டது.
தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்கள் மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத்தக்க வாக்கி டாக்கிகள் மின் மோட்டார் படகுகள் மரம் வெட்டும் கருவிகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டு பயன்பெற்றனர்.
பொதுமக்கள் அவசரகால தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எண் 101 மற்றும் 102 மற்றும் 04562 243666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் வீரர்கள் கலந்து கொண்டனர்.