சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை
13.10.2025
அன்று சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர். இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் அரசு சார்பில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பொது மக்கள் உட்பட பலரும் அண்ணாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.