விருதுநகர் ஶ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மகார்நோன்பு திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சிக்குரிய உற்சவராகிய சந்திரசேகரர் சுவாமி உற்சவர் சிலை கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அதற்கான வைபவம், ஶ்ரீ சந்திரசேகர சுவாமி சிலைக்கு பூஜை புனஷ்காரங்கள் வைத்து ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விருதுநகர் AVKC மகாசபைத் தலைவர் S.K. சந்திரசேகரன் செட்டியார், AVKC மகாசபை செயலாளர் B.நாகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் . இத்திருவுருவச் சிலை ஆயிர வைசிய காசுக்காரச் செட்டியார்கள் சமுதாயத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
- News
AVKC மகாசபை சார்பில் சந்திரசேகர் சாமி உற்சவர் வழங்கப்பட்டது
29.09.2025
விருதுநகர் AVKC மகாசபை சார்பில், அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலுக்கு, ஸ்ரீ சந்திரசேகர் சாமி உற்சவர் வழங்கப்பட்டது.