Blog

News

சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை

13.10.2025
அன்று சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு ‌விருதுநகர் தேசபந்து மைதானத்தில் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர். ‌ இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபத்தில் ‌ அரசு சார்பில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ‌ ராஜேந்திரன் மற்றும் நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் ‌ நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் உட்பட ‌ பல்வேறு அரசியல் கட்சியினர் பொது மக்கள் உட்பட பலரும் அண்ணாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News

தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

13.10.2025
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், விருதுநகர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் இரண்டு நாட்கள் ‌ தீ விபத்து நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் , தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் , ரயில்கள், பேருந்துகள், அலுவலகங்கள் மற்றும் திறந்தவெளி காடு போன்ற பகுதிகளில் ‌தீ விபத்து நேரத்தில் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும்,

மரப்பொருட்கள் , எரிவாயு சிலிண்டர், ஆயில் ,மின்சாரம் மற்றும் உலோகம் தீ விபத்து ஏற்படுமாயின், பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி அணைத்து தீ பாதுகாப்பு உபகரணங்கள் கையாளுவது குறித்த சிறப்பு வகுப்புகளும் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டது.‌ ‌

தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்கள் மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத்தக்க வாக்கி டாக்கிகள் மின் மோட்டார் படகுகள் மரம் வெட்டும் கருவிகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ‌

இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‌ ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ‌ தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டு பயன்பெற்றனர்.

பொதுமக்கள் அவசரகால தீயணைப்பு மீட்பு பணிகளுக்கு எண் 101 மற்றும் 102 மற்றும் 04562 243666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ‌

மேலும் நிகழ்ச்சியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் வீரர்கள் கலந்து கொண்டனர்.

News

விருதுநகரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

13.10.2025
விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோடு வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் மகப்பேரில்லம் நகர்ப்புற சுகாதார மையத்தில் ‌ நகர் மன்றத் தலைவர் மாதவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ‌அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள். கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.

இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விருதுநகர் ‌‌வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‌ தலைமை பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், ‌ நகர் மன்ற உறுப்பினர் திருமதி பேபி , ‌ மருத்துவர்கள் ரூபன் ‌ மற்றும் பிரேமா, வன்னிய பெருமாள் ‌ பெண்கள் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள் ‌ மற்றும் ‌ மருத்துவப் பணியாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Five Falls

Five Falls | 16.10.2025, 8.00 AM

Five Falls | 16.10.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 16.10.2025, 8.00 AM

Main Falls | 16.10.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Tiger Falls

Tiger Falls | 16.10.2025, 7.00 AM

Tiger Falls | 16.10.2025, 7.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் புலியருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

மிதமான நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Moderate Waterflow. Bathing Allowed.

News

சீட் அறக்கட்டளை நடத்திய தொடர் கல்வி பயிற்சி கருத்தரங்கம்

13.10.2025
SEED அறக்கட்டளையின் பத்து வருட பயணக் கொண்டாட்டங்களின் பகுதியாக, சித்த மருத்துவ மாணவர்களுக்கான தொடர் கல்வி பயிற்சி மாதமிருமுறை இந்த ஆண்டு முழுவதும் நடக்கயிருக்கின்றது. அதன் தொடக்க விழா மற்றும் முதல் பயிற்சி பட்டறை 11/10/2025 அன்று திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள க்யூர் சித்தா கிளினிக் வளாகத்தில் நடைபெற்றது. சித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், SEED அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Five Falls

Five Falls | 15.10.2025, 9.00 AM

Five Falls | 15.10.2025, 9.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

நல்ல நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 15.10.2025, 8.00 AM

Main Falls | 15.10.2025, 8.00 AM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

15.10.2025 – Kutralam Season:
நல்ல நீர்வரத்து.
குறைந்த வெயில் உள்ளது. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி. கூட்டம் இல்லை.
Good Waterflow. Bathing Allowed.

Main Falls

Main Falls | 14.10.2025, 6.00 PM

Main Falls | 14.10.2025, 6.00 PM | தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி வீடியோ | Kutralam Season | Kutralam Live.

அதிக நீர்வரத்து.
வெயில் இல்லை. மேகம் உள்ளது.
காற்று உள்ளது. மழை உள்ளது.
குளிக்கத் தடை. கூட்டம் இல்லை.
High Waterflow. Bathing Banned.

BARN Media

Pioneering the Art of Content Creation

L35, J Block, Bharathidasan Colony, 

K.K.Nagar. Chennai – 600078

Tamil Nadu, India.

Mobile: 78459 44655

Email: mail@barnmedia.in

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

BARN Media  @2025. All Rights Reserved.