திருமலையில் வருடாந்திர தெப்ப உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது. ஐந்து நாட்கள் விமர்சையாக நடைபெற்ற இந்த உற்சவத்தில்

ஆலய கருவறையில் இருக்கும் உற்சவமூர்த்திகள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பரிவாரங்கள் ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீதேவி மூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனர். நிறைவு நாளான இன்று மலையப்ப ஸ்வாமி ஶ்ரீதேவி பூதேவி சமேதராக மாட வீதிகளில் வலம் வந்தனர் . பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் தாயார்கள் ஏழு சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பௌர்ணமி நிலவு ஒளியில் வலம் வந்த மலையப்பரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

 

#BARNmedia #News #செய்திகள் #TamilnaduNews  #TNnews #தமிழகசெய்திகள் #NewsUpdate #Tamilnadu