18.08.2025
மதுரையில் தூய்மை பணியாளர்கள் 18.08.2025 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ.26 ஆயிரத்தை வழங்கிட வேண்டும். அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் அடைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
- News
மதுரை தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தூய்மை பணியாளர்கள் 18.08.2025 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.