02.10.2025, மதுரை.
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று “கோவிந்தா” கோஷம் முழக்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.