அசுரரை வென்ற இடம்.. அது தேவரைக் காத்த இடம்..
இரண்டாவது படை வீடு – திருச்செந்தூர் முருகன் கோவில் Thiruchendur Murugan Temple. முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில்.இது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு வெற்றி, அமைதி மற்றும் ஆன்மிகத் திருப்தியை அளிக்கக்கூடிய ஒரு முக்கிய தலமாக திகழ்கிறது.