விருதுநகரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
13.10.2025
விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோடு வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் மகப்பேரில்லம் நகர்ப்புற சுகாதார மையத்தில் நகர் மன்றத் தலைவர் மாதவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள். கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் அண்ணாமலையம்மாள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், நகர் மன்ற உறுப்பினர் திருமதி பேபி , மருத்துவர்கள் ரூபன் மற்றும் பிரேமா, வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.