• Home  
  • எம்.எல்.ஏ செல்வம் வாக்காளர்களுக்கு நன்றி
- Virudhunagar

எம்.எல்.ஏ செல்வம் வாக்காளர்களுக்கு நன்றி

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம்

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் S.P.செல்வம் அவர்கள், வாக்களித்த பொதுமக்களுக்கு நேரில் சென்று தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியின் அண்ணாநகர், ஜக்கம்மாள்புரம், அம்பேத்கர் நகர் மற்றும் கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட முத்துராமலிங்கம் நகர் யானைக்குழாய் தெரு, கூரைக்குண்டு, செவல்பட்டி, சூலக்கரைமேடு ஆகிய பல்வேறு பகுதிகளில் அவர் தீவிரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களை நேரில் சந்தித்து கை குலுக்கி, தமக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்தமைக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.