• Home  
  • மருத்துவமனை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Virudhunagar

மருத்துவமனை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அதிகம் நியமிக்க வேண்டும் என்றும், தலைக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மருத்துவமனை கேன்டீனில் ஏழை எளிய மக்களுக்கு ஏதுவாக உணவுகளின் விலையைக் குறைக்க வேண்டும்; அம்மா உணவகத்தில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் தட்டுப்பாடின்றி உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் மற்றும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவில் மட்டுமே கேன்டீன் இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், சிபிஐ, தமிழ் புலிகள், ஆம் ஆத்மி, தலித் விடுதலை இயக்கம், ஆதித்தமிழர் கட்சி மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.