• Home  
  • தவெக எம்எல்ஏ விஜய் போலீஸில் பாதுகாப்பு கோரிக்கை
- Madurai

தவெக எம்எல்ஏ விஜய் போலீஸில் பாதுகாப்பு கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி தவெக எம்எல்ஏ விஜய்க்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனிப்பட்ட காவல் பாதுகாப்பு கோரி மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி தவெக எம்எல்ஏ விஜய்க்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனிப்பட்ட காவல் பாதுகாப்பு கோரி மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், உசிலம்பட்டி தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் நேரில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

அவர் அளித்த அந்த மனுவில், தொகுதியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு மக்களைச் சந்திக்கும்போது, சிலர் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்த முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே நிலவிவரும் முன்விரோதம் மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன்னை பழிவாங்கும் நோக்கில் சில சூழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், இதனால் தனது உயிருக்கும் உடமைகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது எந்தவித அசம்பாவிதமும் நேரா வண்ணம் தனக்குத் தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது குறித்த குதிரை பேர விவகாரத்தில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், எம்எல்ஏ விஜய் எஸ்பியிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.