• Home  
  • விருதுநகர் எம்.எல்.ஏ நன்றி தெரிவிப்பு பயணம்
- Virudhunagar

விருதுநகர் எம்.எல்.ஏ நன்றி தெரிவிப்பு பயணம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற S.P.செல்வம், தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற S.P.செல்வம், தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கருப்பன்பட்டி, சந்திரகிரிபுரம், சீனியாபுரம், நாராயணபுரம், குந்தலப்பட்டி, பாவாலி, வடமலைக்குறிச்சி, சிவஞானபுரம், மீனாட்சிபுரம், பாப்பாகுடி மற்றும் சின்ன மூப்பன்பட்டி ஆகிய பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்றார்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்களைச் சந்தித்து தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்த அவர், பொதுமக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளையும் குறைகளையும் விரைவில் சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.

எம்.எல்.ஏ-வின் இந்த திடீர் நன்றி மற்றும் குறைதீர்ப்பு பயணம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.