திண்டுக்கல் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் அறுவை மில் அருகில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான இந்த மர குடோனில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. குடோன் முழுவதும் மரங்கள் இருந்ததால், தீ கணநேரத்தில் மளமளவென்று பரவியது.
தகவலறிந்து திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்களும், விலைமதிப்பற்ற அறுவை இயந்திரங்களும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக அதிகாலை நேரம் என்பதால் உயிரிழப்பு எதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Dindigul
திண்டுக்கல்லில் மர குடோன் தீ விபத்து
திண்டுக்கல்லில் மர குடோன் தீ விபத்து
