• Home  
  • பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கலப்பு
- Dindigul

பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கலப்பு

பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவுகள் கலப்பு

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் சின்டெக்ஸ் தொட்டிக்குள், பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் வீசப்பட்டிருந்ததைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன், அங்கே ஒரு மிரட்டல் எச்சரிக்கை துண்டுச் சீட்டும் வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்ததும் வடமதுரை போலீசார் உடனடியாகக் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.