Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • உதயநிதி ஸ்டாலின் கைது – வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
- Madurai

உதயநிதி ஸ்டாலின் கைது – வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது திமுக வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் தேவசேனன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக வழக்கறிஞர்களும் கட்சி நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டு கைது நடவடிக்கைக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டிய அவர்கள், உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி மதுரை மாவட்ட நீதிமன்றப் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.