Thursday, 10 September 2026

Five Falls 360° 4K Video

Contact Info

  • Email: mail@barnmedia.in

  • Home  
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- Virudhunagar

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகரில் உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி மற்றும் செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை டி.எஸ்.பி. யோகேஷ் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, பாவாலி ரோடு, தேசபந்து மைதானம் மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் உபயோகிப்பாளர் உரிமை கமிட்டி தலைவர் ஏகியா முகமது, செயலாளர் மகேந்திரன், பொருளாளர் செய்யது அலி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் பள்ளி நிர்வாகிகள், முகமது சுல்தான், செய்யது நகர் பிரமுகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.