தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் தவெக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ரசிகுமார், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Virudhunagar
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் – விருதுநகரில் தவெக ஆர்ப்பாட்டம்
