• Home  
  • மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
- Dindigul

மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திண்டுக்கல்லில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி நீங்கி நல்ல மழை பெய்யக் கோரி, பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் போதுமான மழை இல்லாததால் ஏரி, குளம், கண்மாய்கள் வறண்டு விவசாயம் பொய்த்து வருகிறது. இதன் காரணமாகக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஒரு அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தொடர் வறட்சியைப் போக்கவும், விவசாயம் செழிக்கவும் இறைவனை வேண்டிக் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இன்று சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர்

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

Main Falls Live Stream

BARN Media  @2026. All Rights Reserved.