• Home  
  • மதுரையில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு
- Madurai

மதுரையில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு

மதுரையில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு – வைகை ஆறு மற்றும் கோயில்களில் திரளான மக்கள் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை வைகை ஆறு மற்றும் முக்கியக் கோயில்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சென்று தங்களது மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி அமாவாசை திருநாளில் நீர்நிலைப் பகுதிகளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மற்றும் வைகை ஆற்றங்கரைகளில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வேத மந்திரங்கள் முழங்க, முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் ஆசி தலைமுறைகளைக் காக்கும் என்பதும், புண்ணிய நதிகளிலும் நீர்நிலைகளிலும் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் செய்வது கர்மவினைகளைப் போக்கும் என்பதும் ஐதீகமாகும். இதையொட்டி மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தீவிர வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

BARN Media

Address:
L35, J Block, Bharathidasan Colony,
K.K.Nagar. Chennai – 600078.

Tamil Nadu, India.

Email: mail@barnmedia.in

Contact: +91 78459 44655

BARN Media  @2026. All Rights Reserved.